கொதிகலனுக்குள் குதித்த இளைஞர்… தனியார் தொழிற்சாலையில் அதிர்ச்சி சம்பவம் : உடலை வாங்க மறுப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2024, 12:38 pm

திருவள்ளுர் அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்டார் பாக்ஸஸ் தனியார்
தொழிற்சாலையில் கடந்த 27 ந் தேதி வலசைவெட்டிகாடு பகுதியைச் சேர்ந்த
இளைஞர் சீனிவாசன் (வயது 26) செக்யூரிட்டி பாதுகாப்பு மீறி தொழிற்சாலைக்குள் உள்ளே புகுந்து கொதிகலனில் விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

இந்நிலையில் அவரின் உயிரிழப்புக்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தொழிற்சாலையை உறவினர்கள் முற்றுகையிடலாம் என தகவல் வந்ததால் தொழிற்சாலை சுற்றி திருவள்ளுர் காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் 50 மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!