தோட்டத்தில் பழங்களை பறித்த இளைஞர்.. துப்பாக்கியால் சுட்ட விவசாயி.. தமிழகத்தில் ஷாக்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 3:39 pm

திண்டுக்கல்- சிறுமலையில் தோட்டத்தில் தொடர்ந்து பழங்களை பறித்ததால் வாலிபரை கள்ள துப்பாக்கியால் சுட்ட விவசாயியை போலீசார் தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை, தாளக்கடை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் வெள்ளையன் (18). இவர் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள தவசிமடையை சேர்ந்த சவேரியார் (வயது 65) சிறுமலை, தாளக்கடை பகுதியில் சொந்தமாக தோட்டம் வைத்துள்ளார்.

இவருக்கும் வெள்ளையன் அடிக்கடி சவேரியார் தோட்டத்தில் பழங்களை திருடி செல்வதாகவும், இதனால் இரு குடும்பத்தின் இடையே முன்பகை இருந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில் சவேரியார் தோட்டத்தின் வழியாக நேற்று இரவு 3 மணிக்கு வெள்ளையன் நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சவேரியார் தான் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கி வைத்து வெள்ளையனை சுட்டுள்ளார்.

இதில் தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் வெள்ளையனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த வெள்ளையனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த வெள்ளையனை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள சவேரியாரை தேடி வருகின்றனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 263

    0

    0