போலீஸ் ஸ்டேஷன் முன்பாக ரீல்ஸ் எடுத்து கெத்து காட்டிய இளைஞர்.. கொத்தாக தூக்கிய காவல்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
16 September 2024, 2:17 pm

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கோவை செல்வபுரம் காவல் நிலையம் மற்றும் அந்த பகுதியின் பலவேறு இடங்கள் முன்பு கெத்தாக நின்று ரீல்ஸ் எடுத்து, சர்ச்சைக்குரிய வசனங்களுடன் அந்த வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்து அவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க: ஒரே ஒரு ஜிலேபிக்கா இப்படி? ஓயாத அன்னபூர்ணா விவகாரம்.. இணையத்தில் தெறிக்கும் மீம்ஸ்..!!

அவர் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், மின்னனு முறகயில் தவறான தகவல்களை பரப்புதல், இருகுழுக்கள் இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!