ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்.. விசாரணையில் பகீர் : சுற்றிவளைத்த போலீஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2024, 1:39 pm

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது 25).

இவர் கோவையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று சொந்த ஊரான காமன்கோட்டைக்கு வந்த இவரிடம் 100 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுகள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையிலான போலீசார் கார்த்திக் வீட்டை சோதனையிட்டனர்.

மேலும் படிக்க: கல்லூரி மாணவியை காரில் அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொல்லை… சுதாரித்த மாணவி : சிக்கிய இளைஞர்!

அப்போது 78 A4 பேப்பர்களில் ஒவ்வொன்றிலும் தலா 4 வீதம் 100 ரூபாய் நோட்டுகள் இருந்த 312 ஜெராக்ஸ் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் பேப்பரை வெட்டிய நிலையில் நான்கு உதிரி தாள்கள் என ரூபாய் 31,600 ஜெராக்ஸ் நோட்டுகள் இருந்தது.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் வடுவதற்காக ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஏ4 பேப்பரில் 100 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த கார்த்திக் என்ற இளைஞரை சத்திரக்குடி போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!