சினிமா ரசிகர்களை தற்போது திரைப்படங்களை காட்டிலும் வெப் சீரிஸ்கள் அதிக அளவில் கவர்ந்து வருகிறது. இதன் காரமாகவே பல பிரபலங்கள் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் மனோஜ் பாஜ் நடிப்பில் வெளிவந்த த ஃபேமிலி மேன் என்னும் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதன் முதல் பாகத்தை விடவும், இரண்டாவது பாகம் பல சர்ச்சைகளை சந்தித்தது. அதற்கு நடிகை சமந்தா ஏற்று நடித்த கதாபாத்திரமே என்று கூறப்படுகிறது. படுக்கையறை காட்சிகளில் மிகவும் தைரியமாக நடித்திருந்த சமந்தாவுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், பல எதிர்மறை கருத்துக்களும் வந்தது. இதன் காரணமாகத்தான் நடிகர் நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆனது என்றும் கூட சொல்லப்படுகிறது.
ஆனாலும் நடிகை சமந்தா இப்படி நடித்தது குறித்து பெருமையாகவே பேசினார். இந்நிலையில் இதன் மூன்றாம் பாகம் இந்த வருட இறுதியில் வெளிவர இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கடந்த இரண்டு பாகங்களை விட இந்த பாகம் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு சர்ப்ரைசாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் இதன் கதை களம் சீனாவிலும், கோவிட் தொற்று சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரியுடன் போராடும் நிலையில் தான் இருந்தது. அப்படிப்பட்ட கதைக் கருதான் ஃபேமிலி மேன் சீசன் 3ல் இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த வெப்சீரிசின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த சீசனிலும் சமந்தா நடிக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் இயக்குனர் இதில் யார் நடித்துள்ளார்கள் என்ற தகவலை ரகசியமாகவே வைத்துள்ளார்.
அதனால் ட்ரைலர் வெளியான பிறகுதான் இதில் யார் நடித்துள்ளார்கள் என்பது பற்றி தெரியவரும். இதனால் ரசிகர்கள் ட்ரெய்லரை காண்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.