ATMகளில் டேப் வைத்து நூதன கொள்ளை… பீதியை கிளப்பும் கோவை கும்பல்.. பகீர் சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2024, 2:36 pm
SBI ATMகளில் மட்டும் மக்களின் பணத்தை நூதனமாக திருடும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ, ஏ.டி.எம் இயந்திரத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன் பணம் எடுக்கச் சென்ற வாடிக்கைகளுக்கு பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
ஆனால் பணம் வராத நிலையில் 24 மணி நேரத்தில் மீண்டும் வங்கி கணக்கில் வந்து விடும் என நினைத்துச் சென்றனர். ஆனால் மீண்டும் வங்கி கணக்கிற்கு பணம் வராததால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குனியமுத்தூர் வங்கி கிளையில் புகார் அளித்தனர்.
இதையும் படியுங்க: 14 வயது சிறுமியை கேலி செய்த போதை இளைஞர்.. தட்டிக் கேட்ட தந்தைக்கு காத்திருந்த ஷாக்!
புகார் அடிப்படையில் வங்கி ஊழியர்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் உள்ளே வந்து, ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் வெளியே வரும் பெட்டியில் “டேப்பை” ஒட்டி விட்டு வெளியே செல்வதும், பின்னர் வாடிக்கையாளர்கள், பணம் எடுக்க முயன்று பணம் வராததால் வெளியே வந்த பின்னர், மீண்டும் அதே நபர்கள் உள்ளே சென்று மொத்தம் ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது.
இதையடுத்து வங்கி கிளை மேலாளர் குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த மர்ம நபர்கள் சென்ற பாதையில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணையை துவங்கினர்.
ATMல் நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல்!#Trending | #Coimbatore | #ATM | #thief | #CCTV | #ViralVideos | #UpdateNews360 pic.twitter.com/jLIZxRL1nS
— UpdateNews360Tamil (@updatenewstamil) September 30, 2024
முதல் கட்ட விசாரணையின் போது இதே பாணியில் கோவை பெரியகடை வீதி ஏ,டி.எம் மையம், திருப்பூர் மாவட்ட அவினாசியில் உள்ள ஏ,டி.எம் இயந்திரம் என 5 ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்துத் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.