நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் 400 லிட்டர் டீசல் திருட்டு? நடவடிக்கை எடுக்க மறுப்பதாக டிரைவர் வேதனை!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2024, 6:04 pm

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுக நேரி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து ஆசிட் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி கடலூர் நோக்கி கடந்த 6 ம் தேதி சென்று கொண்டிருந்தது.

நள்ளிரவில் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே சென்ற போது டிரைவருக்கு தூக்கம் வரவே அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு தூங்கிவிட்டார்.

சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது லாரியின் டீசல் டேங்க் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 400 லிட்டர் வரை டீசல் திருடப்பட்டு இருப்பதாக டிரைவர் இசக்கிமுத்து கூறியதோடு இது சம்பந்தமாக துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுடன் பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தாலே குற்றவாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்ற நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உணவுக்கு கூட வழியின்றி தான் தவிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி