தோட்டத்தில் கட்டியிருந்த இரண்டு மாடுகள் திருட்டு : விசாரணையில் இரு பெண்கள் உட்பட 3 பேர் கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 10:51 am

திருப்பூர் : பெருமாநல்லூரில் 75,000 மதிப்புள்ள இரு மாடுகளை திருடிய இரு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் – பெருமாநல்லூர் அடுத்துள்ள ஆவராம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாமா(வயது 45). இவர் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டியிருந்த இரு மாடுகள் காணாமல் போயுள்ளது.

இதுதொடர்பாக சத்தியபாமா பெருமாநல்லூர் போலீசில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், சத்தியபாமாவின் தோட்டத்தில் தங்கியிருந்து இளநீ்ர் வியாபாரம் செய்து வந்த லட்சுமணன்(வயது 45), அவரது மனைவி கெளசல்யா(வயது 24) ஆகிய இருவரும் ரூ 75,000 மதிப்புள்ள இரு மாடுகளை திருடி, பூங்கொடி என்பவரின் உதவியுடன் விற்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்