தேனி பாஜக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு : தொடரும் தாக்குதல்… இந்து அமைப்பினர் குவிந்ததால் பரபரப்பு.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 1:59 pm

தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லங்கள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக தமிழக முழுவதும் காவல்துறையினர் பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவரது கார் கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சார்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். கடந்த இரண்டு தினங்கள் பிரபாகரன் சென்னை சென்று இருந்தார்.

பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சின்னமனூர் தேனி சாலையில் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் அவரது சொந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரபாகரன் தனது ஸ்கார்பியோ காரை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து திரும்பியவுடன் தனது இடத்திற்கு வந்துள்ளார். அப்போது தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உடனடியாக சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் கார் கண்ணாடிகள் உடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு வேளையில் மர்ம நபர்கள் பிரபாகரனின் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கிரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.

மேலும் கைரேகை தடவிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் விசாரணை கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த சின்னமனூர் பகுதியைச் சார்ந்த இந்த முன்னணி, பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான சம்பவ பகுதிக்கு வருகை தந்தவாறு உள்ளனர்.

பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…