தேனி : தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியின் போது சமூக இடைவெளி இன்றி சினிமா பாடலுக்கு ஆட்டம் போடும் செவிலியர்கள் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கானா விலக்கு பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா காலம் என்பதால் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு 170 க்கு மேற்பட்ட மருத்துவர்கள் 400 க்கு மேற்பட்ட செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்த வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் அலுவலகத்தில் பணியின் போது சினிமா பாடலுக்கு ஒன்றாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர் கண்காணிப்பாளர், ஆண் செவிலியர், மருத்துவ பணியாளர் என ஐந்து நபர்கள் சமூக இடைவெளி இன்றி கை கோர்த்து குழுவாக சினிமா பாடலுக்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகின்றனர். இது குறித்து மருத்துவமனை பணியாளர்களிடம் விசாரித்த போது செவிலியர் கண்காணிப்பாளர் அறையில் அவ்வபோது இவ்வாறு நடனம் ஆடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது குறித்து தனக்கு தெரியவில்லை என்றும், இருப்பினும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறேன் என தெரிவித்தார். அலுவலகத்தில் ஆடியது குறித்து செவிலியர் கண்காணிப்பாளர் ஜென்னி ஜோஸ்வின் கூறுகையில் உடன் பணிபுரிந்த பணியாளரின் பிறந்தநாளை கொண்டாடினோம் அலுவலகத்தில் இது போன்ற கொண்டாட்டங்களை தான் தவிர்த்து இருக்க வேண்டும் என வருத்தமும் தெரிவித்தார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.