கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!!

Author: Babu Lakshmanan
31 January 2023, 6:14 pm

ஆண்டிபட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 180 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

நெசவாளர்கள் நிறைந்த மிகவும் பின்தங்கிய பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக இப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில், 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தை பெற முடியாமல், கல்வி தரத்தில் பின் தங்கியே உள்ளது.

இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், கடும் எதிர்ப்பும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 564

    0

    0