கைதாகிறார் தேனி எம்பி ரவீந்திரநாத்? மின் வேலியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை : தோட்ட மேலாளர்கள் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
2 October 2022, 12:39 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று பழுதடைந்த சோலார் வேளியில் சிக்கி இருப்பதாக வனத்துறையினர் சிறுத்தையை மீட்க சென்ற போது வேலியில் இருந்து தானாக தப்பிய நிலையில் உதவி வனப் பாதுகாவலர் மகேந்திரனின் கையைக் கடித்து தாக்கி விட்டு சிறுத்தை அருகே உள்ள வனப் பகுதிக்குள் தப்பி சென்று விட்டதாகவும் பாதிக்கப்பட்ட உதவி பண காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்

இந்நிலையில் வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை மீண்டும் பழுதடைந்த சோலார் விண்வெளியில் சிக்கிய நிலையில் நேற்று மாலை உயிரிழந்ததாக கூறி வனத்துறையினர் கால்நடை மருத்துவரைக் கொண்டு அவசர அவசரமாக உயிரிழந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து அந்தப் பகுதியில் உள்ள ஓபிஎஸ் இன் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமாருக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்துள்ளனர்

வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை அதே பகுதியில் உயிரினம் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் வனத்துறை அதிகாரியை காப்பாற்றும் நோக்கில் சிறுத்தையை தாக்கிய போது சிறுத்தை உயிர் இழந்து உள்ளதாக சந்தேகம் பெரியப்பா பெரியகுளம் பகுதியில் உள்ள வன உயிரின ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில்

தற்போது வனத்துறையினர் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மகன் ஓ பி ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆடு கிடைத்து இருக்கும் சவுந்தர பாண்டியன் மகன் அலெக்ஸ் பாண்டியன் என்பவர் சிறுத்தையை தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்ததாக கூறி வனத்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

இந்நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு சங்க உறுப்பினர்கள் சங்க வழக்கறிஞர் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இன் மகன் ரவீந்திரநாத் க்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்து புதைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு அந்தப் பகுதியில் சிறுத்தை உயிரிழப்பு குறித்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், ஆட்டுக் கிடை உரிமையாளர் அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கைது செய்திருந்த நிலையில், தற்பொழுது ஓ.பி. ரவீந்திரநாத் நிலத்தின் மேலாளர்களாக பணியாற்றும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பி மீது வழக்கு பாயும் என்று கூறப்படுகிறது. மேலும் கைது செய்ய வாப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 549

    0

    0