கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்டத்தை ஆரம்பித்த அரிக்கொம்பன்… காட்டு யானை மிதித்து ஒருவர் பலி ; தேனியில் பதற்றம்..!!

Author: Babu Lakshmanan
30 May 2023, 10:37 am

தேனி மாவட்டம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த 27ஆம் தேதி அரிக்கொம்பன் யானை திடீரென நகர் பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த பொதுமக்களை விரட்டி வாகனங்களை சேதப்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலை தெறிக்க ஓடி சென்றனர். அப்போது, யானை துரத்தியதில் கம்பம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் பால்ராஜ் யானை தாக்கியதில் தலை மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்ராஜை வனத்துறை அமைச்சர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி ஐம்பதாயிரம் நிதி உதவி வழங்கி இருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் பத்திருக்கும் மேற்பட்டோரை கொன்று துரத்திய அரிக்கொம்பன் தமிழகத்தில் தற்போது முதல் உயிர் பலியை ஏற்படுத்தி இருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 434

    0

    0