தேச பாதுகாப்பிற்கு எதிராக எந்த ஒரு சமூக ஊடகங்களிலும் கருத்துக்கள் வெளியிட்டால் அந்த ஊடகம் தடை செய்யப்படும் என மத்திய தகவல் ஒலிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையிலும், அவர்களது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை ஒண்டிவீரன் நினைவு தபால்தலை மத்திய அரசு மூலமாக வெளியிடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கினர்.
அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்த அவர்.. ஆசாதிகா அம்ருத் மஹா உற்சவத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களையும், அறியப்படாத தலைவர்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
வரம் 25 ஆண்டுகள் இந்தியா வளமையாக,ஆற்றல் மிக்க நாடாக இருக்க அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என்றார். சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் வகையில் தூர்தர்ஷனில் நாளை முதல் 75 வாரங்கள் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட உள்ளது. சுதந்திரத்திற்காக பாரப்பட்ட எண்ணத்தை தலைவர்களை நினைவு கூறும் வகையில் திருநெல்வேலியில் 10 நாட்கள் கண்காட்சி மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மூலமாக நடத்தப்பட உள்ளது என்று அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அவர் கூறுகையில்..
கருத்து சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் உள்ளது. அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. இந்திய அரசுக்கு எதிராக இந்திய ராணுவத்துக்கு எதிராக இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு எதிராக ஏதாவது நிறுவனம் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு மாதமாக 100க்கும் மேற்பட்ட youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்றும் இந்திய நாட்டிற்கு எதிராக தேசத்திற்கு எதிராக கருத்துக்களை சொன்ன பத்து சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில சமூக ஊடகங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அங்கிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேசத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் எந்த youtube ஆக இருந்தாலும் எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். முன்னதாக பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சரை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 10 அணிகளுக்கு இடையே நடந்து வரும் போட்டியில் புள்ளி பட்டியலில்…
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
This website uses cookies.