Categories: தமிழகம்

பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும்னு ஆதீனங்களுக்கு விதி இருக்கு.. அதை கடைப்பிடிக்கிறார்களா? எம்.பி. சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு!!

மதுரை : பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும் என்ற விதி ஆதீனங்களுக்கு உண்டு அதை அவர்கள் கடைபிடிக்கறார்களா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கூறியுள்ளார்.

நீர்நிலை – மற்றும் நத்தம் புறம்போக்கு நீர்வழி கரையோரம் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களை வெளியேற்ற கூடாது எனவும், அம்மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும், மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்கிட வேண்டும், கோவில் நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும், இடியும் நிலையில் உள்ள மாநகராட்சி தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு கட்டிக் கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், அக்கோரிக்கை தொடர்பாக மதுரை ஆட்சியரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மனு அளித்தார்.

தொடர்ந்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பல்வேறு வகைமை நிலங்களில் குடியிருப்போருக்கு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என 5 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

ஆட்சியர் அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்க வேண்டிய நில வகைகளில் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மதுரை ஆதினம் தனது உயிருக்கு ஆபத்து எனவும், பிரதமரையும், அமித்ஷாவையும் சந்திக்கவிருப்பதாக பேசியது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர், ஆன்மீக தலைவர்கள் அரசியல் பேச களத்திற்கு வந்துவிட்டால் அரசியல் எதிர்வினை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்படும்.

மடாபதிகள் மற்றும் ஆதினங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிராதயங்கள், சடங்குகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது.

அதற்கு மடாதிபதிகளும், ஆதினங்களும் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தான் எல்லா மடாதிபதிகளும் வந்துள்ளனர்.

சன்னியாசி தர்மப்படி சாதுக்கள் ஆதினங்கள் எங்கே போனலும் நடந்து தான் போக வேண்டும், ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்,
அதையும் பிச்சையெடுத்து தான் சாப்பிட வேண்டும். அதனை ஓடும் நீரில் கழுவி சுவையில்லாமல் சாப்பிட வேண்டும் என உள்ளது.

இதையெல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை. அதை பின்பற்ற வேண்டும் எனவும் நாங்கள் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி விட்டார்கள். எல்லோரும் மாறி கொண்டுள்ளனர். அதைத்தான் அரசும் சொல்கிறது.
காலத்திற்கேற்ப மனிதனை மனிதம் தூக்கும் அடிமைத்தனம் மாற வேண்டும்.

பழமை வாதம் உதிரும் போது இந்தச்சத்தம் ஏற்படுவதாகவும், ஜனநாயகம் இந்த சத்தத்தை மீறி வெற்றி பெறும் என பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பவன் கல்யாண் செய்த காரியத்தால் தேர்வை தவறவிட்ட மாணவர்கள்… பெற்றோர் கண்ணீர்!

ஆந்திர துணை முதல்வர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண் தற்போது ஆந்திரா மாநிலத்தின் துணை…

24 minutes ago

19 வயது இளம்பெண்ணை சீரழித்த 23 பேர் : 7 நாட்களாக நடந்த கூட்டுப்பாலியல் பலாத்காரம்!

19 வயது இளம்பெண்ணை 23 பேர் 7 நாட்களாக கூட்டுப் பாலியல் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்து. உத்தரபிரதேச மாநிலம்…

49 minutes ago

சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?

வணிக போர் சீனா மீதான வணிகப் போரை தொடங்கியிருக்கிறது அமெரிக்கா. இந்த இரு நாடுகளும் உலகின் மிகப் பெரிய சக்தி…

1 hour ago

தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. பனியன் தொழிலாளர்களுக்கு காத்திருந்த ஷாக்!

திருப்பூர் கோவில்வழியை சேர்ந்தவர்கள் பாபு(வயது 47), இளையராஜா(38). பனியன் நிறுவன தொழிலாளர்கள். கொரோனா காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த 15…

1 hour ago

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…

3 hours ago

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…

4 hours ago

This website uses cookies.