ஆளே இல்லாமல் ஒரு அணி இருக்கிறது.. அந்த அணி ஓபிஎஸ் அணிதான் : முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2023, 9:22 pm

ஆளே இல்லாமல் ஒரு அணி இருக்கிறது.. அந்த அணி ஓபிஎஸ் அணிதான் : முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!!

தர்மபுரி மாவட்டம், அரூரில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான மா.பா பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. அணியில் இருந்து பா.ஜ. விலகி சென்ற பின் சிறுபான்மை மக்களிடம் பெரியளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தினமும் 1000 -ம் மேற்பட்டோர் அ.தி.மு.க. வில் இணைந்து வருகின்றனர். 52 லட்சம் பேருக்கு பூத் கமிட்டியில் பொறுப்புகள் தரும் ஒரே கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் அ.தி.மு.க. அடித்தளத்தை உருவாக்கி உள்ளது.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு தான். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ஒழிப்பு என தி.மு.க. கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்த 30 மாதங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். பெயருக்கு குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை.

நீட் தேர்வு ஒழிப்பு என பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 50 லட்சம் பேரிடம் தி.மு.க. கையெழுத்து வாங்குவது மிகப்பெரிய பகல் வேஷம் நாடகம். இதை மக்கள் உணர்கிறார்கள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணி அதிமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆளே இல்லாமல் அணி ஒன்று இருக்கிறது என்றால் அது ஓபிஎஸ் அணிதான் என்று சிறிதபடி பதில் சொல்லிச் சென்றார்.

இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட செயலாளர் (ம) முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ