தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்ல.. போட்டியே திமுக – அதிமுகவுக்குத்தான் : திருமா ஆருடம்!!
Author: Udayachandran RadhaKrishnan29 January 2024, 9:42 pm
தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பே இல்ல.. போட்டியே திமுக – அதிமுகவுக்குத்தான் : திருமா ஆருடம்!
திருமாவளவன் அளித்த பேட்டியில், “வரும் பட்ஜெட் கூட்டத்தொடர் பாஜகவுக்கு கடைசியாக இருக்கலாம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு வாக்களித்து பாஜவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையாது, பாஜக கட்சி ஒரு பொருட்டே கிடையாது என்பதோடு இங்கு திமுக மற்றும் அதிமுக தான் முக்கியம்.
நிதிஷ்குமார் எங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறியது அவருக்கு தான் நஷ்டமாக அமையும், அவர் சில ஆண்டுகள் மேலும் முதல்வராக தொடர வரலாற்று பிழையை செய்துள்ளார், தேர்தலுக்கு பின்னர் அவர் வருத்தப்படுவார் என நினைக்கிறேன். நிதிஷ்குமார் இல்லாவிட்டாலும் கூட ‘இந்தியா’ கூட்டணி வரும் தேர்தலை கம்பீரமாக சந்தித்து சனாதன சக்திகளை வீழ்த்தும்” என்றார்.