அப்படிப்பட்ட பரீட்சையே தேவையில்ல.. அறிவுரை வழங்கிய ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன் : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2023, 4:59 pm

பள்ளி மாணவனை கண்டித்த ஆசிரியரை பெற்றோரை அழைத்து வந்து தகராறு செய்த மாணவன்?

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு மேல்நிலைப்பள்ளி. இங்கு 450 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்

இதனிடையே பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக ஆசிரியரை இடிப்பது போல் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவனை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் அந்த பள்ளி மாணவன் தனது தந்தையை அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ஆசிரியரிடம், மது போதையில் உள்ள மாணவனின் தந்தை உங்களுக்கு ஓட்டுநர் லைசன்ஸ் இருக்கா? நீங்க ஹெல்மெட் போடுறீங்களா? நீங்க ரூல்ஸ் படி நடக்கீறிர்களா வாக்கு வாதம் செய்தும். அந்த மாணவன் ஆசிரியரை தரம் குறைவாக பேசுவதும் பதிவாகியுள்ளது.

இறுதியில் எனக்கு தேர்வே தேவையில்லை என கூறிவிட்டு மாணவன் செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!