ஹெச் ராஜாவை உடனே தூக்கி உள்ளே போடுங்க… காங்கிரஸ் கட்சியினர் வைத்த திடீர் DEMAND..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 September 2024, 6:01 pm

கிருஷ்ணகிரியில் பாஜக எச். ராஜாவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க: உழைத்த தொண்டர்களுக்கு உரிய மரியாதை இல்லை.. சீமான் மட்டும்தான் கட்சியை வளர்த்தாரா? கொந்தளிக்கும் செயலாளர்!

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் தலைமையில் கலந்து கொண்டு பாஜகவின் எச். ராஜா காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை குறித்து அவதுறாக பேசியதை கண்டித்தும் எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷ்ங்களை எழுப்பி கண்டன உரையாற்றினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…