பாதையும் இல்லை, பாலமும் இல்லை.. ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2023, 3:35 pm

பாதையும் இல்லை, பாலமும் இல்லை : ஆற்றை கடந்து இறந்தவரின் சடலத்தை தூக்கி செல்லும் அவலம் : மக்கள் அவதி!

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே வேம்பார்பட்டி ஊராட்சி செடிப்பட்டியில் பல நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செடிப்பட்டி கிராமத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடுகாட்டிற்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை.

இதனால் சந்தன வர்த்தினி ஆற்றில் கலக்கும் காட்டாறு வெள்ளத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அளவு கடந்த தண்ணீர் செல்வதால் அந்த நேரத்தில் இறந்தவர்களை கொண்டு செல்ல முடியாமல் அந்த கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் செடிப்பட்டி கிராம மக்கள் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய இடுகாட்டிற்கு சாலை வசதி மற்றும் காட்டாற்றை கடக்க பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Madha Gaja Raja movie review பொங்கல் ரேஸில்”மதகதராஜா”வெற்றி நடையா…கலக்கலான கமெண்ட்களை அள்ளி விடும் ரசிகர்கள்..!