இனி சமரசத்துக்கு இடமில்ல.. சின்ன தப்பு செஞ்சாலும் ஆக்ஷன் தான் : பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 December 2022, 4:37 pm

பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்தினார்.

தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை , எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாஜக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu