தமிழ்நாட்டை சேர்ந்த ஒருத்தர் கூட இல்லை, கேவலமா இருக்கு : கொதித்து பேசிய அன்புமணி ராமதாஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 5:57 pm

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு ஒருபக்கம் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போடுகிறார்கள்… மறுபக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி துன்புறுத்தில் காவல்துறையை வைத்து நிலங்களை பிடுங்கி அதை என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசின் விவசாய எதிரான போக்கை கண்டிக்கின்றோம். இது நெய்வேலியை சார்ந்த என்.எல்.சி. பிரச்சினை கிடையாது. என்.எல்.சி.யால் 5 மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் என்.எல்.சி-யை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடி வருகிறது.

என்.எல்.சி வருவதற்கு முன் 8 அடியில் இருந்த நிலத்தடி நீர் தற்போது 1,000 அடிக்கு சென்றுவிட்டது. இதற்கு முழு காரணம் என்.எல்.சி. 10 ஆயிரம் ஏக்கம் நிலம் இன்று என்.எல்.சி.யிடம் உள்ளது. அந்த 10 ஆயிரம் ஏக்கர் நிலத்திலே இன்று பழுப்பு நிலக்கரியை எடுத்தால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம்.

மத்திய அரசு என்.எல்.சி நிர்வாகத்தை 2025-க்கும் தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் ஒன்று கூறினால் அது 100 சதவிகிதம் உண்மையாகத்தான் இருக்கும்.

அடுத்த ஆண்டிற்குள் என்.எல்.சி.யை தனியாரிடம் விற்கப்போகிறோம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1 ஆண்டுக்குள் என்.எல்.சி.யை விற்க உள்ள மத்திய அரசுக்கு மாநில திமுக அரசு எதற்கு மக்களை அச்சுறுத்தி, துன்புறுத்தி நிலங்களை கையகப்படுத்திகொடுக்கிறது.

அங்கே இருக்கின்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை. நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை கொடுக்கவில்லை. 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்த மக்களுக்கு மொத்தத்தில் 1,800 பேருக்கு தான் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த 1,800 பேரில் அனைவரும் தற்போது வேலையில் இல்லை. அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். தற்காலிகமாக சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்துள்ளனர்.

என்எல்சி சமீபத்தில் 297 பேர் ஜூனியர் இன்ஜினியர் வேலையில் எடுத்தனர். அதில் ஒரு நபர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது. வேலையும் கொடுப்பதில்லை… வாழ்வாதாரத்தை அழிக்கிறது. நிலத்தடி நீர், விவசாயத்தை ஒழித்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் பாதிப்பு. அதனால் தான் என்.எல்.சி.யை பாமக எதிர்க்கிறது’ என்றார்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…