வெறும் அறிவிப்பு மட்டும்தா இருக்கு…செயல்பாட்டுல ஒண்ணுமே இல்ல : திமுக ஓராண்டு ஆட்சி குறித்து செ.கு தமிழரசன் கருத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 9:47 pm

வேலூர் : தமிழக அரசு இன்று அறிவித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் மகிழ்ச்சியளிக்கிறது எல்லா பள்ளிகளிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செகு தமிழரசன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு நேற்று அறிவித்த ஆதிதிராவிட நலத்துறை மாணிய கோரிக்கை பழமையானது. இதில் புதுமையில்லை ஏமாற்றமளிக்கிறது.

இந்த தமிழக அரசின் ஓராண்டு கால சாதனை என்பது அறிவிப்புகள் மட்டும் தான் நிறைவாக உள்ளது. செயல்பாடுகள் குறைவுதான். தமிழக அரசு இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கபடும் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தபடுகிறது. இங்கும் செயல்படுத்தும் போது அதனை எல்லா பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் இது மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாகும்.

7 தமிழர்கள் விடுதலையில் உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது. தற்போது யாருக்கு எந்தெந்த அதிகாரங்கள் என வரைமுறை செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிகாரங்கள் அனைவருக்கும் என்பது உண்மையாகும்.

ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்த வேண்டும். ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி