திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது.. பிரபல நடிகையின் பேச்சால் சர்ச்சை.!
Author: Rajesh10 June 2022, 2:44 pm
தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார் டாப்சி. அதன் பின்னர் காஞ்சனா, கேம் ஓவர், வந்தான் வென்றான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த டாப்சி தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர். அதுமட்டுமில்லாமல் நடிப்பதையும் தாண்டி தி வெட்டிங் பேக்டரி என்ற திருமணத்திற்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுக்கும் ஒரு கம்பெனியை தனது தங்கையுடன் சேர்ந்து டாப்சி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது நடிகை டாப்ஸி, இனி படங்களில் தான் நடிக்கப் போவதில்லை எனவும், நான் படத்தில் நடித்து சம்பாதித்த பணமே எனக்கு போதுமானதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சினிமாத்துறையில் பாலியல் ரீதியாக தனக்கு அதிகமான தொந்தரவு நடப்பதால், இனி எந்த ஒரு மொழி திரைப்படங்களிலும் நான் நடிக்கப்போவதில்லை என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார் .
நடிகை டாப்ஸி தன் மனதில் பட்டதை பல பேட்டிகளிலும், சமூக வலைதளங்களிலும், தைரியமாக பேசி விடுவார். ஆனால் தற்போது அவருக்கும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சினிமாவில் ஏற்பட்டுள்ளதையடுத்து பலரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
மேலும் அவுட் சைடு பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை டாப்ஸி ஏற்கனவே நடத்திவரும் நிலையில், இனி படங்களை தயாரிப்பதில் மட்டுமே நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே டாப்ஸியின் அறிவிப்புக்கு பலரும் அதிர்ச்சியான நிலையில் இதற்கு முன்னர் உங்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு இல்லையா அப்போதே விலகாமல் தற்போது ஏன் விலகுவதாக அறிவிக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகின்றனர்.
இன்னும் ஒரு சில தரப்பினர், பணம் சம்பாதிக்கும் வரை அனைத்தையும் சமாளித்து விட்டு, தற்போது பணம் கையில் சேர்ந்தவுடன் இப்படி சினிமாத்துறையை விட்டு செல்வதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு நல்ல நடிகை சினிமாவில் நடிப்பதை விட்டு விலகுவது இந்திய சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.