இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் TOLL GATE இருக்காது.. தூத்துக்குடிதான் என் 2வது வீடு : கனிமொழி!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி இன்று (06/04/2024) தனக்கு ஆதரவாக திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தோழப்பன்பண்ணை ஊராட்சியில் பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி: இந்தத் தேர்தலில் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, இதுவரை பார்க்காத அளவிற்கு மழை வெள்ளத்தால் மக்கள் சந்தித்துள்ளார்கள்.
ஆனால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட நிவாரண பொருட்களாகட்டும் மக்களுக்கு தரப்பட்டுள்ள நிவாரண நிதியாக இருக்கட்டும் வீடு இழந்தவர்கள் வீடு கட்டுவதற்கு நமது முதலமைச்சர் 4 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். பகுதியாக வீடு இடிந்து உள்ளவர்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆடு மாடு இழந்தவர்கள் என் எல்லாருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பிரதமர் இதுவரை தமிழ்நாட்டிற்கு நிவாரண நிதி கொடுக்கவில்லை. நிவாரணம் வேண்டும் எனக் கேட்டபோது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி முழுவதும் பார்வையிட்டு சென்றார்கள் ஆனால், நாம் நிதி கேட்பது பிச்சை கேட்பது போல் நினைக்கிறார்கள்.
அதனை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் கொடுக்க மாட்டார்கள். நமது வரியெல்லாம் வாங்கி செல்கிறார்கள். ஒரு ரூபாய் வரியை வாங்கி சென்று 26 பைசா மட்டுமே கொடுக்கிறார்கள். உத்திர பிரதேசத்திற்கு இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுக்கிறார்கள். மழை வெள்ளத்தில் எதுவும் கொடுக்கவில்லை ஆனால் தேர்தல் வந்தவுடன் திரும்பத் திரும்ப வருகிறார்கள். தமிழகத்தில் யாரும் ஓட்டுப் போட போவதில்லை என்று அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
100 நாள் வேலை ஒழுங்காக கிடைப்பதில்லை பணமும் ஏறுவதில்லை. நம் இந்தியா கூட்டணி ஆட்சி மீண்டும் ஒன்றியத்தில் ஆட்சி வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம் என்றும் சம்பளம் 400 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்,காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
15 லட்ச ரூபாய் போடுவோம் எனத் தெரிவித்தார்கள் ஆனால் போடவில்லை. மோடி ஆட்சிக்கு வந்த போது கேஸ் சிலிண்டர் 410 இப்போது 1050 ரூபாய். ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி வந்தவுடன் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும்.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடி மூடப்படும். பெற்றோர்களை 75 ரூபாய் டீசல் விலை 65 ரூபாய் வழங்கப்படும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் மூடப்படும். இதெல்லாம் செய்ய வேண்டும் என்றால், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுப் போட வேண்டும்.
மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் நிதியிலிருந்து அரசுப் பள்ளியில் 82 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்படும். பாஜகவின் ஒரு அமைச்சரின் மகன் விவசாய மக்கள் மீது காரை ஏற்றி 4 கொலை செய்தார்.
தற்போதும் டெல்லியில் ஆதார விலை வேண்டும் என்று கோரிக்கை வைத்த விவசாயிகள் மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்ததற்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக, மோடி அரசு ஆகிய இரண்டுமே ‘ஸ்டிக்கர்’. அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியே பழகியவர்கள், எதையும் ஸ்டிக்கர் ஒட்டாமல் தரமாட்டார்கள். அதேபோல, பாஜக பெரிய ஸ்டிக்கர். டெல்லியில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு இந்த தேர்தல் வாக்களிக்க வேண்டும்.
தூத்துக்குடி எனது இரண்டாவது தாய் வீடு, மறுபடியும் உங்களோடு பணியாற்றக்கூடிய வாய்ப்பை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்க வேண்டும்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.