வெற்றிக்கு தேவை இந்த மூன்றும் தான்.. பாராட்டு விழாவில் அரசு பள்ளி மாணவர்களிடையே சந்தியான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 December 2023, 6:01 pm

வெற்றிக்கு தேவை இந்த மூன்றும் தான்.. பாராட்டு விழாவில் அரசு பள்ளி மாணவர்களிடையே சந்தியான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பேச்சு!!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ரயில்வே பள்ளி மாணவர்கள் இணைந்து சந்திராயன் 3 வெற்றி பெற உறுதுனையாக இருந்த அத்திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

அதனை தொடர்ந்து பள்ளியில் பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களை சந்தித்து உரையாடினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய சந்திராயன் 3 திட்டஇயக்குனர் வீரமுத்துவேல், இத்திட்டம் வெற்றி பெற்ற பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தாலும் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருவதாக கூறினார்

மேலும் பேசியவர் தனக்கு சந்திராயன் 3 ல் வாய்ப்பு கிட்டியதாகவும் அதில் எடுத்த வேலையின் மீது நேர்மையுடன் செயல்படுவது அர்பணிப்புடன் செயல்படுவது ஒழுக்கமாக செயல்படுவது ஆகிய மூன்றையும் கடைபிடித்ததால் என்னால் சந்திராயன் 3 வெற்றி பெற்றதாகவும் சிலர் இதனை கடைபிடிக்க முடியாமல் இருப்பதால் வெற்றி பெற இயலவில்லை என கூறினார்.

ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் நிலவின் தென் துருவத்தில் செயற்கைகோளை இறக்கும் நிகழ்வில் தோல்வி சந்தித்தாலும் இந்தியா அதில் வெற்றி பெற்றுள்ளது.

அதற்கு காரணம் திட்டமிட்டதை எந்த வித மாற்றமும் இல்லாமல் சரியாக செய்ததால் வெற்றி பெற முடிந்தததாகவும், தன்னுடன் பணிபுரிவரக்ள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணி செய்ததால் வெற்றி பெற முடிந்ததாக வீரமுத்துவேல் தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ