தேவர்மகன் -2 வில் விஜய்சேதுபதிக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? அதிரவைத்த அதிரடியான அப்டேட்.!

Author: Rajesh
24 June 2022, 4:58 pm

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் இப்போது டிரெண்டாகி வருகின்றது. பெரும்பாலும் இந்த படங்களில் தயங்காமல் நடிக்க கூடிய நடிகர் தான் விஜய் சேதுபதி. அவர் சினிமா துறையில் வளர்ந்து வந்ததுக்கு அப்புறம விக்ரம் வேதா படத்தில் தான் இந்த முயற்சியை கையில் எடுத்தார்.

அடுத்து விஜயுடன் இணைந்து மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட போன்ற படங்களில் காணப்பட்ட இவரை மக்கள் அதிகளவு வரவேற்க தொடங்கினர். மீண்டும் இது போன்று படங்கள் பண்ண மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார்.

ஹீரோவாக நடித்து கிடைத்த அங்கீகாரத்தை விட இது போன்ற படங்களில் நடித்து கிடைத்த அங்கீகாரம் தான் அவர்க்கு அதிகமாக வந்தது. இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு சிவாஜி , கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் நடிகர் கமல் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் கிராமத்து தலைவனாக சிவாஜி அவருக்கும் மகனாக கமல் நடித்திருப்பர். அதே வகையில் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு மகனாக விஜய் சேதுபதி நடிப்பதாக தெரிகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!