கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், ரவுடி கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கோர்ட் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
தற்போது ரவுடி கவுதம் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததக கவுதமின் மனைவி மோனிஷா (வயது 21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (வயது 28), மோனிஷாவின் மாமியார் (வயது 48) ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ரவுடி கவுதம் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன்.
எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னை சுட்டு பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர். என்னை என்கவுண்டர் செய்துவிடுவதாகவும் தெரியவந்துள்ளது. இதனை போலீசாரே என்னிடம் தெரிவித்தனர்.
எனது மனைவியை மாமியார் வீட்டில் வைத்து பார்த்துவந்தேன். எனக்கு அப்பா அம்மா இல்லை. இதனால் மனைவி மீது கஞ்சா வழக்கு பதிந்துள்ளனர். போலீசார் என்னை நீதிமன்றத்தில் சரண்ட் ஆக கூறுகின்றனர்.
நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள். எனக்கு தீர்வு வேண்டும்.இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…
நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
This website uses cookies.