டாஸ்மாக் கடை வேணும்னு காசு குடுத்து சொல்ல சொன்னாங்க.. 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பொய் சொல்லிட்டோம்.. (வீடியோ)!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 7:55 pm

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமின் போது அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரங்காபுரத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என மனு கொடுத்து, செய்தி சேனல்களுக்கு, பேட்டி கொடுத்திருந்தனர்.

இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டாம் என போராட்டம் நடப்பது வாடிக்கையாக உள்ள நிலையில், தங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என ஒரு ஊரே திரண்டு மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று, அந்த ஊரில் உள்ள பிற பொதுமக்களும், பெண்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

நேற்று ஊரில் இருந்த, விவரம் தெரியாத, முதியவர்களை, திட்டமிட்டு, பணம் தருவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதாவது தங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்க, ஒரு நபர் இடம் வழங்கி உள்ளார். ஆனால் பொதுமக்கள் நாங்கள் அதனை வேண்டாம் என தடுத்து வருகிறோம்.

தனது நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்து, சந்து கடை மூலம் பல லட்சம் வருமானம் பார்க்கும் நோக்குடன், அந்த குறிப்பிட்ட நபர், திட்டமிட்டு, முதியவர்களை அழைத்துச் சென்று, இத்தகைய மனு கொடுத்துள்ளார்.

இதற்கு சில மது பிரியர்களும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அது முழுக்க முழுக்க, திட்டமிட்டு, பொதுமக்களை 300 ரூபாய் பணம் தருவதாக கூறி அழைத்துச் சென்றது அம்பலம்.

நேற்று, பரபரப்பாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியான நிலையில், இன்று ஊர் பொதுமக்கள், அலறி அடித்து, நாங்கள் தெரியாமல் கேட்டு விட்டோம் என புலம்பல்.

டாஸ்மாக் மதுபான கடை அமைக்க, அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி இடம் கொடுத்திருப்பதாகவும்… அதற்கு ஆதரவு திரட்டும் நோக்குடன், ஊரிலிருந்து விவரம் தெரியாத முதியவர்களை அழைத்துச் சென்று, திட்டமிட்டு, செய்தி பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 447

    0

    0