இரு வேறு இடங்களில் பூட்டை உடைத்து கொள்ளை.. டிப்டாப் ஆசாமியை தேடும் போலீஸ்..!

Author: Vignesh
26 July 2024, 5:56 pm

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் கடந்து இரு தினங்களில் இரு வேறு இடங்களில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில்
ஈடுபட்ட டிப்டாப் ஆசாமியின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் நாகராஜ். நேற்று இரவு வழக்கம் போல் கடை முடிவிட்டு சென்று உள்ளார். இந்த நிலையில், இன்று காலை கடையை திறந்து பார்க்கும் போது கல்லாப்பெட்டியில் வைத்து இருந்த ரூபாய் 15,000 திருடு போய் இருந்தது.

இதையடுத்து, கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது கடையின் பின்பக்க ஷட்டரை உடைத்து கடைக்குள் நுழைந்த மர்ம நபர் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூபாய் 15,000 திருடி சென்றது தெரியவந்தது. இதே போல், வேளாங்கண்ணி பகுதியில் உள்ள மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 10,000 மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் திருடி சென்று உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Udit Narayan viral kiss video ரசிகைக்கு LIVE முத்தம்…மேடையில் பிரபல பாடகரின் லீலை…வைரலாகும் வீடியோ..!