பிளாஸ்டிக் ட்ரம்ம கூட விட்டு வெக்க மாட்டிங்கறாங்க : அலேக்காக திருடிய காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 7:53 pm

திருப்பூர் அருகே காளம்பாளையத்தில் வீட்டிலிருந்து பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வைரல்.

திருப்பூர் அருகேயுள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன். இவர் தனது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பி வைக்க பிளாஸ்டிக் ட்ரம் ஒன்றை வைத்திருந்தார்.

இன்று அதிகாலை தண்ணீர் நிரப்ப வந்த பொழுது ட்ரம்மை காணவில்லை. இதனையடுத்து அருகில் தேடிய அவர், வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த பொழுது அதில் மர்மநபர் ஒருவர் பிளாஸ்டிக் ட்ரம்மை தூக்கி செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து அந்நபரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையடுத்து வைரலாகி வருகிறது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி