சட்டசபையில் நான் பேசுவதை நசுக்குகிறார்கள்… நேரலையில் வரும் போது Technical Fault என கூறுகிறார்கள் : எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 May 2022, 3:12 pm

கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நலம் இலவச மருத்துவ முகாம் துவக்க விழா நடைபெற்றுது. இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார்.

மே தின வாழ்த்துக்களை தெரிவித்து செய்தியாளர் சந்திப்பை துவங்கினார். கோவை தெற்கு தொகுதியில் நலம் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இலவச மருத்துவ முகாமில் 8 விதமான பிரிவில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சை உதவி அளிக்கப்படும்.

தெற்கு தொகுதியின் ஒவ்வொரு பூத்துக்கும் இதை கொண்டு செல்வோம். சட்டப்பேரவை ஜனநாயக ரீதியில் நடைபெற வேண்டும் என முதல்வர் கூறுகிறார். ஆனால் ஆளும் கட்சிக்கு எந்தவிதமான சங்கட்டம் வந்து விடக்கூடாது என்பதில் சபாநாயகர் உள்ளார்.

நேரடி ஒளிபரப்பு இருந்தாலும் வெளிவரும் பொழுது டெக்னிக்கல் பிராப்ளம் எனத் தெரிவிக்கிறார்கள். எனது பேச்சுக்கலையே நறுக்கி போடுகிறார்கள்.
அமைச்சர்கள் பேசுவது மட்டும் முழுவதும் வருகிறது. முழுமையான வீடியோக்களை வெளிவர வேண்டும். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்கக் கூடாது.

கோவை பந்தய சாலையில் சாலை மோசமாக உள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியது முழுவதுமாக வெளிவரவில்லை.இதை ஒரு சவாலாக பார்க்கிறேன்.

இலங்கை மக்களுக்கு மனிதாபிமானத்துடன் உதவ வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார் அதை வரவேற்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அழிவதற்கு காரணம் யார்…? என்பதையும் கேட்கிறேன்.

நீங்கள் சொல்லும் மாடலில் முள்ளிவாய்க்காலில் இறந்த லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பங்கு இருக்கிறது. அதையும் தற்போது நினைத்துப் பாருங்கள் என நினைவு படுத்துவதாக தெரிவித்தார்.

  • Salary in cinema 25 வருஷம் சினிமால இருந்தா சம்பளம் கிடைக்காது, ஆனால்?- காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ