Categories: தமிழகம்

வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து திருட்டு.. வட மாநில இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

வேடசந்தூர் அருகே வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் – சிக்கிய ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள முத்தானாங்கோட்டை பிரிவு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. ஆட்டோ டிரைவர். இவரது வீடு அதே பகுதியில் தனியாக உள்ளது. இவரது வீட்டில் அருகே தனியார் நூற்பாலைக்கு சொந்தமான தங்கும் விடுதி உள்ளது. இதில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி உள்ளனர்.

நேற்று கார்த்தியின் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்ட நிலையில், கார்த்தி மட்டும் இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை மூன்று மணியளவில் வீட்டிற்குள் சத்தம் கேட்டு கார்த்தி கண் விழித்து பார்த்த போது வட மாநில வாலிபர்கள் 3 பேர் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதனைத்தொடர்ந்து கார்த்தி அவர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் கார்த்தியை தாக்கி விட்டு, சமையலறையில் அரிசி வாளியில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூபாய் 50 ஆயிரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒரு நபரை கார்த்தி சுற்றி வளைத்து பிடித்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கார்த்தி அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊர் மக்கள் வடமாநில வாலிபரை கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அதன்பின்னர் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் நூற்பாலை நிர்வாகத்தினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்பதும், அவருடன் பணிபுரியும் இரண்டு பேருடன் வந்து கார்த்தியின் வீட்டில் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது.

அப்போது அந்த பகுதி பொதுமக்கள் விடுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களால் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே அங்குள்ள தங்கும் விடுதியை நூற்பாலை வளாகத்திற்குள் மாற்ற வேண்டும், அதுவரை அஜய்யை விடுவிக்க மாட்டோம் என்று நூற்பாலை நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இன்னும் ஒரு வாரத்தில் விடுதியை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் அஜய்யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Poorni

Recent Posts

விளக்கு பிடிச்சாங்களா? விஜய்யை விமர்சித்த சத்யராஜ் மகளுக்கு பிரபலம் பதிலடி!

சமீபத்தில் திமுகவில் சேர்ந்து புதிய பதவிக்கு தேர்வான சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ், ஒரு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய்யை…

37 minutes ago

பெண்களை நிர்வாணப்படுத்தி ஆபாச வீடியோ எடுத்து விற்பனை.. கொட்டிய பணம் : சிக்கிய கும்பல்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பழைய நகரத்தை சேர்ந்த கணேஷ், ஜோஸ்னாவும் வேலைக்காக பெங்களூரு சென்றனர். இவர்களுக்கு அனந்தபூர் மாவட்டம் குந்தகல்லை…

1 hour ago

வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!

நடிகர் விக்ரம் கடின உழைப்புக்கு பெயர் போனவர். பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வந்த விக்ரம், தனக்கான வாய்ப்பை தேடி…

2 hours ago

கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?

சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…

16 hours ago

ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…

கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…

17 hours ago

விஜய் டிவி VJ பிரியங்காவுக்கு சைலண்டாக நடந்த 2வது திருமணம்? வெளியான புகைப்படம்!

விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…

18 hours ago

This website uses cookies.