பழனி அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி நூதன திருட்டு : 31 சவரனை பறித்து சென்ற கொள்ளையர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 11:38 am

பழனி ஆர்.ஜி. நகரில் அடுதடுத்து மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆர்.ஜி. நகரில் வசித்து வருபவர் கோபி. இவரது மனைவி சர்மிளா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சர்மிளாவை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.

மேலும் ஷர்மிளாவின் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு சர்மிளா அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக் கொடுக்க சொல்லியுள்ளனர்.

உயிருக்கு பயந்து சர்மிளா வீட்டில் உள்ள 27 சவரன் தங்க நகைகளை எடுத்து கொடுத்தவுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள கருணாகரன் என்பவரின் வீட்டில் நுழைந்த திருடர்கள் நான்கு சவரன் தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர். ஆர்.ஜி. நகரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையர் புகுந்து திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • anirudh music for village subject directing by tamizharasan pachaimuthu கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!