பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 8:11 pm

பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பயின்று வருபவர் ஜாக்குலின் மேரி(39).

நேற்று மாலை மனம்பூண்டி பகுதிக்கு சென்று விட்டு திருக்கோவிலூர் நோக்கி தமது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள், திருக்கோவிலூர் மேம்மாபலத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு நோக்கி வந்த போது, ஜாக்குலின் மேரி அணிந்து இருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு திருக்கோவிலூர் தரைப்பாலம் வழியாக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் சென்ற சாலையில் பின்தொடர்ந்து போலீசாரம் சென்றுள்ளனர்.

மேலும் அரகண்டநல்லூர், காணை உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு குற்றவாளியை பிடிப்பதற்காக வாகன தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

அப்போது மாம்பழப்பட்டு அருகே வரும்போது போலீசார் இருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு அருகாமையில் இருந்த கரும்பு தோப்புக்குள் புகுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கரும்பு தொப்பை சுற்றி வளைத்து, இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கரும்பு தோப்பில் ஒளிந்திருந்த கொள்ளையர்கள் அபிமன்யம்(23) மற்றும் அருள்ஜோதி(26) ஆகிய இருவரையும் பிடித்து திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயின் பறிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கரும்பு தோப்பில் இரவு முழுவதும் தேடி கைது செய்த பணிப்படை போலீசாருக்கும் DSP மனோஜ் குமாரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 321

    0

    0