மீண்டும் ஒரு அதிர்ச்சி.. 3-ம் வகுப்பு மாணவிக்கு நேரக்கூடாத சம்பவம்!

Author: Hariharasudhan
11 January 2025, 1:44 pm

குஜராத்தில் 3ஆம் வகுப்பு மாணவி வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்: கார்கி ரான்பரா என்ற 8 வயது சிறுமி, குஜராத் மாநிலம், அகமதாபாத் அடுத்த தால்டேஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, அவர் நிலை சாய்ந்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் ஷர்மிஸ்தா சின்ஹா கூறுகையில், “கார்கி, வழக்கம்போல் இன்று பள்ளிக்கு வந்தார்.

அவர் அப்போது எப்போதும் போல் மிகவும் இயல்பாகவே இருந்தார். இதனையடுத்து, பள்ளியின் முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தன்னிலை மறந்த கார்கி, வழியில் உள்ள சேரில் அமர்ந்தார். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்ய முயன்றனர்.

8 year old girl dies due to cardiac arrest in Gujarat Viral video

ஆனால், அது பலனளிக்காததால் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்தோம். தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கார்கி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தற்போது உயிருடன் இல்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரை நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாட்டம்… நல்ல வாழ்றாருயா ஹிருதிக் ரோஷன்!

பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது மாரடைப்பால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. முன்னதாக, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் 3ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, வகுப்பறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Pallavi rejects Vikram movie அய்யோ அவரா அப்போ NO…பிரபல நடிகரை புறக்கணித்த சாய் பல்லவி..!
  • Leave a Reply