திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்… திருச்செந்தூர் முருகன் கோவில் பக்தர்களுக்கு போடப்பட்ட திடீர் கட்டுப்பாடு…!

Author: Babu Lakshmanan
14 November 2023, 5:46 pm
Quick Share

திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், பக்தர்களுக்கு திடீரென கட்டுப்பாடு போடப்பட்டுள்ளது.

இலங்கை அருகே கடல் பகுதியில் இன்று நண்பகல் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவிலும் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள் கடலில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 328

    0

    0