திமுகவில் பூகம்பத்தை கிளப்ப திருமா முடிவு.. ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினை விட்டு அவர் எங்கும் செல்ல மாட்டார் : அமைச்சர் ரகுபதி!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 7:46 pm

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசு கொடுக்கும் நிதியை வைத்து வீடுகள் கட்ட முடியாது அந்தத் தொகை போதாது.

குறைவான தொகை தான் கொடுத்து வருகிறார்கள் அதனால் அந்த திட்டத்தில் வீடு கட்டுபவர்கள் வீடு கட்ட முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். மாநில அரசு நிதி ஒழுங்காக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு போதுமான அளவில் நிதி உள்ளது.

திருமாவளவன் யாரை வேண்டுமானாலும் மாநாட்டுக்கு அழைத்திருக்கலாம் ஆனால் தலைவர் தளபதியோடு நெருக்கமாக இருக்கக்கூடிய தலைவர்களில் ஒருவர் திருமாவளவன் என்றும் தளபதியை விட்டுப் போக மாட்டார்.

புதிதாக FL2 என்ற பெயரில் தனியார் அதிகம் மது கடைகளில் திறப்பது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே இருந்த மதுபான கடை பகுதியில் புதிதாக டெக்கரேட் பண்ணி நவீனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

அங்கு கூடுதலாக தான் விற்பனை செய்வார்கள் அங்கே ஏன் செல்ல வேண்டும் என்று சிரித்தபடியே பேசிவிட்டு சென்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!