விஜயின் கடைசி ‘நச்’.. கைதட்டிய ஆதவ் அர்ஜூனா.. கைவிடப் போகிறாரா திருமா?

Author: Hariharasudhan
7 December 2024, 10:41 am

திமுக கூட்டணியில் குழுப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து கூறி இருப்பது உண்மை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட்டார். மேலும், இந்த நிகழ்வில் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டார்.

நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “பிறப்பால் முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது. மன்னராட்சி தான் இங்கு இருக்கிறது, மன்னராட்சியைக் கேள்வி கேட்டால், சங்கி என்று சொல்கிறார்கள். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 2026 தேர்தலில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும்.

Aadhav arjuna and Vijay

தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும், தமிழக மக்கள் புதிய அரசியலை உருவாக்க முடிவு எடுத்துவிட்டார்கள். ஒட்டுமொத்த சினிமாத் துறையையும் அரசியல் மூலம் ஒரு நிறுவனம் கட்டுப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்று சொல்வது தான் திராவிடம் தமிழ்த் தேசியம் என்றாலும், பிரபாகரன் சொன்னது போல எல்லோரும் சமம் என்பதுதான்” என்றார்.

இது விஜயை வைத்துக் கொண்டு, திமுக கூட்டணியில் இருந்து கொண்டு ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சு. இந்த நிலையில், இது குறித்து திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “நான் சுதந்திரமாகவும், விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கும் எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு.

இதையும் படிங்க: நம்முடன் தான் இருக்கிறார்.. எந்த அழுத்தமும் இல்லை.. விஜயின் பேச்சும்.. திருமா பதிலும்!

இதில் எந்த அழுத்தமும் இல்லை, விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது, அம்பேத்கர் பற்றி இன்று எல்லோரும் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அவரே தான் பொறுப்பு.

Thirumavalavan on Aadhav aRjuna

அதற்கு கட்சி பொறுப்பல்ல, அது அவருடைய தனிப்பட்ட கருத்து. திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் குழுப்பம் ஏற்படுத்தும் வகையில், ஆதவ் அர்ஜுனா கருத்து கூறி இருப்பது உண்மை.

இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம், அவரிடம் உரிய விளக்கம் கிடைக்கும் என்று பார்ப்போம். அதன் பிறகு இயக்க முன்னணித் தோழர்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம்” எனக் கூறினார். இதனால், ஆதவ் அர்ஜூனாவின் விசிக பொறுப்பு பறிபோக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • Sardar 2 Music Director Change திடீரென விலகிய யுவன்…சர்தார் 2 படக்குழுவில் குழப்பம்.!