விசிக – தவெக மோதலா? ஒத்துக்கொண்ட திருமாவளவன்!

Author: Hariharasudhan
9 December 2024, 3:55 pm

விசிக – தவெக இடையே எந்த சிக்கலும், மோதலும், சர்ச்சையும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர், விசிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சார்பில் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அண்மைக் காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மதிக்கும், நம்பகத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது.

Thirumavalavan on Aadhav Arjuna Suspends

எனவே, அது குறித்து தொடர்ச்சியாக அவரிடம் அறிவுறுத்தல் செய்தோம். இருப்பினும், அண்மை நிகழ்வின் அவரது பேச்சு கட்சியின் நன்மதிக்கும், தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்தது. எனவே, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருக்கிறோம்.

அவர் இதற்கு விளக்கம் தருவதற்கான நேரம் இருக்கிறது. பலமுறை அவருக்கு வாய் வழியாக எச்சரிக்கை அளித்திருக்கிறோம். தற்போது அவசர நடவடிக்கையாக இதனைச் செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும், நெருக்கடியும் இல்லை. அவர்கள் அதுப் பற்றி பேசவும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: ‘ஆ..ஊன்னா என்னா?’.. ஆட்டம் கண்ட சட்டப்பேரவை.. இபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

மேலும் பேசிய திருமாவளவன், “விஜய் கலந்து கொண்ட விழாவில் நான் பங்கேற்காதது சுதந்திரமான முடிவு. விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. விஜய் உடன் எந்தவித சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை.

ஆனால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்றால் எங்களது கொள்கைப் பகைவர்கள், எங்களது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கதை கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதால், முன் உணர்ந்து எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு.

TVK vijay on VCK

அவரோடு நிற்பதை வேறு எந்தக் கோணத்திலும் நாங்கள் தவறாக அணுகவில்லை. எனவே, அவரை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என்று குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக ஆதவ் அர்ஜூனாவிடம் நான் பேசினேன்.

‘நீங்கள் தாராளமாக இந்த விழாவில் கலந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் பற்றி பேசுங்கள், நூலின் பின்னணி பற்றி பேசுங்கள். அரசியல் பேச வேண்டாம்’ என்று வழிகாட்டுதல்களை நான் கூறினேன். ஆனால் அவர் பேசிய பேச்சு, விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது. மாற்றுக் கட்சியினர் ஒரே மேடையை பகிந்துகொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாதிரியான ஒரு சூழல் இல்லை’ எனக் கூறினார்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!