தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி என திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சமூக நலக் கூடத்தில், தோழர் எஸ்.நடராஜன் படத் திறப்பு விழா இன்று (ஜன.28) நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் பங்கேற்று, எஸ்.நடராஜனின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மீண்டும், த்ன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் என்ற தன்னுடைய பொறுப்பை மறந்து பேசுவதும், செயல்படுவதும் நீடிக்கிறது.
தமிழகத்தில் ஒரு தலித் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் பேசியது, தலித்துகளை அபகரிக்கும் சூழ்ச்சி. தலித்துகளைப் பற்றி கரிசனமாக பேசுவது, தலித்துகள் முதல்வராக வேண்டும் என்பது வலதுசாரி அரசியல் நாடகம்.
பாஜகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக சீமான் செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் ஏற்படுகிறது, தமிழ்த் தேசியம் பேசும் சீமான், தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார். ஈரோடு கிழக்குத் தேர்தலில் பாஜகவின் ஆதரவாளர்கள் வாக்கைப் பெறுவதற்காக, சீமான் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்.
இதையும் படிங்க: ’என்ன அண்ணாமலை.. உன்னையும் சேர்த்துதான்..’ நீ கூட களத்துக்கு போறதில்ல.. அன்புமணி பரபரப்பு பேச்சு!
சீமான் செய்யும் அரசியல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய, விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று புரியவில்லை. பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளைப் பெறவே இந்த யுக்தியைக் கையாளுகிறாரா? என்று ஐயம் எழுகிறது.
தமிழ்த் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியலை சீமான் ஏன் செய்கிறார்? என்ற கேள்வி எழுகிறது. இது அவருடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்பதை, நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியது போல், மீண்டும் ஒருமுறை சுட்டிக் காட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…
ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
This website uses cookies.