கூட்டணி மாறும் விசிக? தவெகவுக்கு பதில்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan17 March 2025, 8:50 am
அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தேர்தல் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, விழா மேடையில் பேசிய திருமாவளவன், “நடிகர்கள் கட்சி தொடங்கினால் விசிக பலவீனம் அடையும் என ஊடகங்ளில் எழுதுவார்கள். தேமுதிக தொடங்கப்பட்டபோது விசிக பலவீனமடையும் என எழுதினார்கள். விசிகவை யாரும் சேதப்படுத்த முடியாது. நம்முடைய கொள்கை, களம் என்பது புதியது.
சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைத்திருப்பி, மடை மாற்ற முடியாது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கையால் உள்வாங்கிய இளைஞர்களை மடைமாற்ற முடியாது. கொள்கை அளவில் பன்பட்ட இயக்கமாக விசிக திகழ்கிறது. இதனால்தான் பல கட்சி தலைவர்கள் வாழ்த்தி அங்கீகரித்துள்ளனர்.

கொள்கை பிடிப்புள்ள இளைஞர்களை அணிதிரட்ட களத்தில் இறங்கினேன். தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராவோம் என்றோ வரவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் தாக்கு பிடிக்கிறோம், அதுதான் வெற்றி.
இதையும் படிங்க: தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!
ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை, ஆனால் அடுத்த முதலமைச்சர் என ஊடகங்களில் எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவராக இருந்திருந்தால், அடுத்த முதல்வர் என எழுதியிருப்பர். இன்றைக்கும் நமக்கு அரசியலில் பேரம் பேச தெரியவில்லை.
பேரம் முக்கியமல்ல, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களிலும் போட்டியிட வேண்டும் என கேட்டுப் பெற முயற்சிப்போம். ஆனால், அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.