’பேராசை கிடையாது’.. விஜய் மீது வருத்தம் இல்லை.. திருமா சொல்ல வருவது என்ன?

Author: Hariharasudhan
7 December 2024, 5:19 pm

இங்கே போகலாமா, அங்கே போனால் அள்ளலாமா என்ற பேராசை தங்களுக்கு கிடையாது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை அசோக் நகரில் அம்பேத்கர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “நமது சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

இங்கே போகலாமா, அங்கே போனால் அள்ளலாமா? என்ற பேராசை எங்களுக்கு கிடையாது. கூட்டணி விவகாரத்தில் ராமதாஸைப் (பாமக நிறுவனர்) பின்பற்றுமாறு எங்களுக்கு கூறுகின்றனா். அம்பேத்கர் எங்களுக்குப் பொருள் அல்ல, அவர் ஒரு கருத்தியல் அடையாளம்.

TVK Vijay on Thirumavalavan issues

கூட்டணி நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாகி உள்ளோம். விசிக இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. எனக்கு எந்த தடுமாற்றமும் இல்லை, தொண்டர்கள் யாரும் தடுமாறக்கூடாது” எனத் தெரிவித்தார். முன்னதாக, புத்தக் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முக்கிய கருத்தை முன்வைத்திருந்தார்.

அதில், தமிழ்நாட்டில் சமத்துவத்துக்காக மாநில அரசு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை என்பதை வேங்கைவயலில் மேல்நிலைக் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசினார். சம்பிரதாயத்துக்கு ட்வீட் செய்வதும், அறிக்கை வெளியிடுவதும், மழைநீரில் இறங்கி புகைப்படம் எடுப்பதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: என்னையும் கூப்டாங்க தம்பி.. ஆனா திருமா.. சீமான் பரபரப்பு பேச்சு!

அது மட்டுமல்லாமல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அம்பேத்கர் தொடர்பான விழாவிற்கு கூட வர முடியாத அளவிற்கு கூட்டணி அழுத்தம் உள்ளதாக குறிப்பிட்ட விஜய், அவர் மனம் முழுவதும் நம்மோடு தான் இருக்கும் எனவும் கூறினார்.

Aadhav Arjuna about Alliance

அதேநேரம், விசிக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும், 2026-ல் கருத்தியல் தலைவர் தமிழகத்தை ஆள வேண்டும், பிறப்பால் இனி ஒருவர் முதலமைச்சராகக் கூடாது என்ற கருத்தையும் பரபரப்பாக முன் வைத்திருந்தனர்.

மேலும், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “விஜய்யின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தான் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது. விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை” எனவும் கூறி இருந்தார். தற்போது இது அரசியல் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 110

    0

    0