’யார் நீங்கல்லாம்..?’ தட்டித்தூக்கிய தவெக.. முட்டிமோதும் விசிக.. திருமா படம் ரிலீஸ்!

Author: Hariharasudhan
27 February 2025, 11:44 am

சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்ததாக விஜயை திருமாவளவன் விமர்சித்த நிலையில், திருமா நடித்த படத்தை தவெகவினர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னை: “சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்துவிட்டு, பணத்தைத் தேடி, சுகத்தைத் தேடி, சொத்தைச் சேர்த்து, இளமை காலத்தை எல்லாம் சொகுசாக வாழ்ந்து, சினிமாவில் காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

அது மட்டுமல்லாமல், சினிமாவின் மூலம் நன்கு சம்பாதித்துவிட்டு, வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு அரசியலுக்கு வருகிறார்கள். அவர்கள் இதுபோன்று ஊர் ஊராகச் சென்று பேசத் தேவையில்லை. உடனே கட்சி தொடங்கலாம், ஆட்சி அதிகாரத்தையும் பெறலாம்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தர்மபுரியில் நேற்று நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால், தவெக தொண்டர்கள் தற்போது கொதிப்படைந்துள்ளனர். அதன் விளைவாக, கடந்த 2007ஆம் ஆண்டு அன்புத்தோழி என்ற படத்தில் திருமாவளவன் கதாநாயகனாக நடித்ததை மீண்டும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு வெளியான மின்சாரம் திரைப்படத்தில் முதலமைச்சராகவும் திருமாவளவன் நடித்ததையும் சுட்டிக் காட்டியுள்ளானர்.

Thirumavalavan acted movies

கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பேச்சுக்கு, தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டிலே எம்ஜிஆர், என்டிஆரை மேற்கோள்காட்டி விஜய் பேசியிருந்தார். ஆனால், களத்திற்கு வராமல் ஒர்க் ஃப்ரம் ஹோமில் விஜய் அரசியல் செய்து வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனால், பரந்தூருக்கு நேரடியாகச் சென்ற விஜய், அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிலையில், நேற்று தவெகவின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகப் பேசினார். அதேநேரம், 1967 மற்றும் 1977ல் நிகழ்ந்த அரசியல் மாற்றம் போல, 2026லும் அரசியல் மாற்றம் நிகழும் எனவும் விஜய் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கு ஏற்றார் போல், விஜயுடன் கைகோர்த்துள்ள அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும், 2026ல் தவெக வென்ற பிறகு, தான் தமிழில் உரையாற்றுவேன் எனவும் பேசினார். இதனாலேயே, கட்சி தொடங்கியவுடன் முதலமைச்சர், ஆட்சி என பேசுவதை ஆளும் கட்சி தரப்பில் விமர்சிக்கப்பட்டது.

இதையும் படிங்க: பெண் போலீசார் முன்பு நிர்வாணமாக நின்ற ஆண் போலீஸ்.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

அதேநேரம், திருமா நடித்த படத்தை வெளிக்கொண்டு வருவது இது முதல் முறையல்ல. முன்னதாக, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவனுக்கு திமுகவின் அழுத்தம் எனப் பேசிய விஜய்க்கு, விசிக அவ்வளவு பலவீனமாக இல்லை என திருமா பதிலளித்திருந்தார்.

இதன் பின்னர் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிகவின் ஆளுர் ஷா நவாஸ், கூத்தாடி எப்படி திருமாவளவனைப் பற்றிப் பேசலாம் எனக் கூறியதற்கு, சினிமா விமர்சகர்கள், மோகன் ஜி உள்ளிட்ட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த அன்புத்தோழி வெளியே வந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

  • Director Ashwath Marimuthu viral story இது என்ன பாத்ரூம்..கடுப்பான குத்துச்சண்டை நடிகை..இயக்குனர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
  • Leave a Reply