நாகரிகத்தின் எல்லையை மீறியுள்ளார் சீமான்.. இது அவருக்கே எதிராக முடியும் : திருமா கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
10 January 2025, 11:56 am

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன், டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை நேரில் சந்தித்து திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்திருக்கிறோம்.

பல்கலைக்கழகம் மானிய குழு அண்மையில் வெளியிட்டிருக்கிற புதிய விதிகள் மாநில உரிமைகளை பரிப்பது போன்று உள்ளது. உயர் கல்வி அனைத்தையும் இந்திய ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய விதிகளை கொண்டுள்ளது.

துணைவேந்தர், பேராசிரியர் நியமனம் போன்றவற்றில் மாநில அரசுக்கு எந்த ஒரு அதிகாரம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை விடுதலை சிறுத்தை கட்சிகள் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்த விதிகளை திரும்ப பெற வேண்டும் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தீவிரமாக தேர்தல் பணியாற்றும்.

இதையும் படியுங்க: இந்தி மொழி குறித்து கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரபரப்பு பேச்சு.. கல்லூரி பட்டமளிப்பு விழாவில் காரசாரம்!

அண்மைக்காலமாக பெரியார் மீது ஆதாரம் இல்லாத அவதூறுகள் பரப்பப்பட்டு வருகிறது. நீண்டகாலமாகவே சங்ரிவார் கும்பல் இந்த சதி வேலையை செய்து வரும் சூழலில். மொழியின் பெயரால் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறி வைக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது. சீமானின் பேச்சு நாகரிகத்தின் எல்லையை மீறி உள்ளது. குதர்க்க வாதமாக உள்ளது. அவர் பேசுகிற அரசியலுக்கு எதிராக போய் முடியும்.

இந்திய அளவில் பேசப்படும் மதவழி தேசியம் மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தேசிய அளவிலான மத வழி தேசியம். பாஜக உடைந்த சங்பரிவார் பேசுகிற மத வழி தேசியம் தான். மொழி வழி தேசியத்தின் முதன்மையான எதிரியாக இருக்க முடியும். தமிழ் தேசியத்தின் உண்மையான எதிரியாக இருக்க முடியும். அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் தனது இறுதி மூச்சு வரையில் தீவிரமாக களப்பணி ஆற்றிய தமிழ்நாட்டு மக்களின் பெரு மதிப்புக்குரிய தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல இந்த போக்கை அவர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

Thirumavalavan Condemns About Seeman Speech

சீமான் பேச்சுக்கு அண்ணாமலை ஆதரிப்பது போல் உள்ளது குறித்த கேள்விக்கு: அண்ணாமலை ஆதரிக்கிறார் என்றால் அவர் பேசுகிற அரசியலை சீமான் புரிந்து கொள்ள வேண்டும். சார்ந்தவர்களும் ஆதரிப்பார்கள் அந்த அரசியலைத்தான் இவர் பேசுகிறார் என்பதை சீமான் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

தமிழை பெரியார் இழிவுபடுத்தியதாக சீமான் சொன்னது குறித்த கேள்விக்கு: பெரியார் தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் கொண்டுள்ள அக்கறையினால் விமர்சனம் வைத்துள்ளார்.

அதில் புதுமை இல்லை, அறிவியல் சொற்கள் உள்வாங்கப்பட வேண்டும். இன்னும் தொன்மை காலத்து சொற்களே இருக்கின்றன என்று தமிழில் தொன்மையை குறிப்பதற்காக காட்டுமிராண்டி காலத்தில் இருந்து தமிழ் பேசப்படுகிறது என்கிற தொன்மையை உணர்த்துவதற்காக பேசியிருக்கிறார்.

Thirumavalavan Talk About Seeman

காலத்திற்கு ஏற்ப, நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய புதிய சொற்களை உள்வாங்கிக் கொண்டு வளர்ச்சி பெற வேண்டும் என்கிற அந்த எதிர்பார்ப்பில் அவர் சொன்னதை தவறாக திரித்து பேசுகிறார்கள். அவரின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார்கள் அது ஏற்புடையதல்ல என கூறினார்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 76

    0

    0

    Leave a Reply