வேங்கைவயலில் துக்க நிகழ்வில்கூட வெளியூர் உறவினர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வேங்கைவயலை தனித்தீவாக போலீசார் மாற்றி உள்ளனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டு பரபரப்புக்கு உள்ளான நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் கருப்பாயி என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த வெளியூர் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அதேநேரம், உயிரிழந்த மூதாட்டி சிபிசிஐடி போலீசார் சுட்டிக்காட்டிய காவலர் முரளி ராஜாவின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “வேங்கைவயல் விவகாரத்தில் புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்ற அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவைத் தான் வெளியிட்டனர்.
இதையும் படிங்க: அரசியல் அழுத்தமா? ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!
டிஎன்ஏ முடிவு அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம் எனக் கூறும் அவர்கள், அது குறித்து எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. தாயும், மகனும் பேசிய பேச்சை ஆதாரமாகத் தருவது பெரும் அதிர்ச்சியையேத் தருகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.