RSS தொண்டர் போல செயல்படுகிறார் ஆளுநர்… அதிமுகவை பாஜக விழுங்குகிறது… திருமாவளவன் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
17 December 2022, 4:00 pm

சென்னை ; அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட பாஜக விழுங்குகிறது என்று சொல்லாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கோவில் மனைகளில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- இன்று தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று உள்ளது. 2016 ஆம் ஆண்டு போடப்பட்ட அரசாணை 28 ரத்து செய்யப்பட வேண்டும். 1998 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தபடி பகுதி முறையில் வாடகை வசூலிக்கும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோல கோவில் மனையில் நீண்ட காலமாக வசித்து வருபவர்களுக்கு அவரவர் வசிக்கும் இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும். தற்போதைய தலைமைச் செயலாலர் இறையன்பு தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக அரசு கோவில் மனைகளில் குடியிருப்போரின் நலனை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரைவில் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன்.

வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் இவர்களிடம் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளும் போக்கை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களில் கடைகளை காலி செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் அவற்றை இடிக்கும் முயற்சியில் ஈடுபடுவது போன்ற போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

சில நேரங்களில் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படுவார்கள். வீடுகளை இடிக்குமாறு ஆட்சியாளர்கள் யாரும் உத்தரவு பிறப்பிப்பதில்லை. சரியாக இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்வதற்காக ஒரு சில அதிகாரிகள் இதுபோன்று செயல்படுகிறார்கள்.

அரசியல் சாசனத்தின்படி நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகிறார். அதிமுகவை பாஜக உடைக்கிறது என்று சொல்வதை விட பாஜக விழுங்குகிறது என்று சொல்லலாம். அதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்று கூறினார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!