இண்டியா கூட்டணிக்கே தோல்வி.. தமிழிசை ஆசை நடக்காது : திருமாளவன் பொளேர்!
Author: Udayachandran RadhaKrishnan8 February 2025, 2:33 pm
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், பாஜக வெற்றி மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்துள்ளது.
காங்கிரசும் ஆம் ஆத்மி பேச்சுவார்த்தையில் நடத்தி தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். தனித்து நின்று வாக்குகளை சிதறடித்துள்ளனர்.
இதையும் படியுங்க: ஈகோவால் INDIA கூட்டணிக்கு தொடர் பின்னடைவு.. திருமா சூசகம்!
காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துகிற அனைத்து தார்மீக பொறுப்பும் இருந்து உள்ளது. சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இந்திய கூட்டணி ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அப்போதுதான் பாஜக உடைய தில்லுமுல்லு அரசியலை முறியடிக்க முடியும்.
வழக்கத்திற்கு மாறாக டெல்லியில் பாஜகவினர் வாக்குகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் பொருள் கொடுத்திருக்கிறார்கள் என்ற விமர்சனம்.
வாக்கு எண்ணிக்கை முன்பு சமூக ஊடகங்களில் பரவி இருக்கிறது. எப்படியாவது தலைநகர் டெல்லியை கைப்பற்ற வேண்டும் என்பது பாஜகவின் திட்டமாக இருந்தது அதை அவர்கள் சாதித்து காட்டியுள்ளனர்
கெஜ்ரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட இந்தியா கூட்டணியர் உள்ளவர்களுக்கு உள்ள தோல்வி. காங்கிரஸ் கட்சி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு தொழிலாவும் ஈகோ இல்லாமல் மாநில கட்சியோடு இணக்கத்துடன் இருந்து பாசிசத்தை முறியடிக்க வேண்டும். தமிழிசை ஆசை தமிழ்நாட்டில் நடைபெறாது.
விடுதலை சிறுத்தைகள் இந்தியா கூட்டணி மத்தியிலும் மாநிலத்தில் திமுக கூட்டணியை வலிமைப்படுத்துவது உறுதியாக இருப்போம் எங்களிடம் எந்த ஊசல் ஆட்டமும் இல்லை.
பீகார், ஆந்திரா முன்னிலைப்படுத்தி போன நிதிநிலை அறிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையும் தயாரிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியை தக்க வைத்துக் கொள்வது பாஜக அரசு கவனமாக உள்ளது. பாஜக இல்லாத மாநிலங்கள் ஓரவஞ்சனையாகவும், வேற்று தாய் மனப்பான்மையில் கையாளுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.