திமுகவுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் திருமா பேசுகிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2024, 6:19 pm

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் நீங்களும் ஐ.ஏ.எஸ் ஆகலாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது :- ஜாபர் சாதிக் வழக்கில் நீதிபதி வெளியேறியதில் வேறு ஏதாவது அழுத்தம் கொடுக்கப்பட்டதா? Technical காரணமாக இருக்காது. ஆளுங்கட்சி சம்மந்தப்பட்ட நபர் என்பதால் அது தொடர்பாக விளக்கம் தேவை.
தவறான முறை மூலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருப்பதாக நீதிபதி கேள்வி கேட்டு உள்ளனர். தி.மு.க சார்ந்த வழக்கறிஞருக்கு காட்டமாக கேள்வி கேட்டு உள்ளனர். அவர்களாக சொல்லும் வரை இதில் என்ன என்று தெரியவில்லை. விளக்கம் வேண்டிய கட்டாயம் உண்டு.

நீதிபதிகள் open நீதிமன்றத்தில் don’t take court for granted என எம்.பி., தி.மு.க வழக்கறிஞர்கள் சொன்னதை பார்த்து உள்ளேன்.

சபாநாயகர் கண்ணாடியை பார்க்க வேண்டும். தி.மு.க தொண்டர்களை விட சபாநாயகர் வேலை செய்கிறார். தன் இருக்கைக்கு நடு நிலைமையாக இருக்க வேண்டும். அப்பாவு உரிமை இருக்கு, தி.மு.க சார்பில் ஒரு தலைபட்சமாக இருப்பதாக கருதுகிறேன். அப்பாவு கருத்தா? தி.மு.க உறுப்பினராக கருத்தா? ஆளுநர் தொடர்பான கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம், பல்கலைக் கழக மானிய குழு ஆகிய விதிகளை கல்வி மாநில பட்டியலில் இல்லை. தமிழக அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க யாருக்கு உரிமை கொடுத்து உள்ளனர்.

ஆளுநர் ரவி வந்தவுடன் துணைவேந்தர் நியமனம் வெளிப்படையாக நடைபெறுகிறது. இறுதி ஊர்வலத்தில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து வேடிக்கை பார்க்க சொல்கின்றனர். Maartyr என சொன்னது சட்ட விரோதம் இல்லையா? விதைக்கப்படுகிறார்கள்? என சொன்னது தவறில்லையா.

இதையும் படியுங்க: தென்காசியில் தலை துண்டித்து ஒருவர் கொலை.. அதிர்ச்சியில் தென்மாவட்டங்கள்!

பொது வெளியில் பேசியது, நடந்ததை தான் கண்டிக்கின்றோம். அதற்கு தான் கண்டன பேரணி. சட்டத்துறை அமைச்சர் பதிலுக்கு பதில் அண்ணாமலை மீது வழக்கு போட வேண்டும் என்றால் ஓடி வருவார்கள்.

குடும்ப நிகழ்வு என சொல்லி பாஷா இறப்பின் போது இறுதி ஊர்வலத்தில் கோவையில் 144 போட முடியாதா?

கோவி செழியன் அமைச்சர் தான் அரசியல் செய்கிறார். ஆளுநர் அமைச்சருக்கும் கற்பிக்கிறார். பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம் தான் ஆனால் தீவிரவாதியை கொண்டுவதை தான் தவறு என்கிறோம்.

தி.மு.க, காங்கிரஸ் விட சமூக நீதியில் பா.ஜ.க பின்னால் உள்ளதா என்பதை திருமா சொல்ல வேண்டும்.அரசியலுக்காக பேசுகிறார். தி.மு.க வுடன் இருக்க வேண்டும், கட்டாயத்தில் பேசுகிறார்.

Annamalai Vs Thirumavalavan

முதல்வர் அவ்வப்போது மறந்து விடுவார், தி.மு.க 200 தொகுதிகளில் டெபாசிட் இழப்பார்கள். முதல்வருக்கு வேண்டுகோள், 234 தாண்டி செல்ல வேண்டாம். மோடிக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி நாட்டுக்கு எதிரானதாக மாறி விடக் கூடாது என கூறினார்.

  • Cool Suresh calls for Bigg Boss ban பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை பண்ணுங்க..கொந்தளித்த கூல் சுரேஷ்..!
  • Views: - 55

    0

    0

    Leave a Reply