இளமை திரும்புதே…. துள்ளி குதித்த திருமாவளவன் : உற்சாகத்தில் கட்சியினர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 May 2022, 1:57 pm

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சென்னை செல்வதற்காக வந்தார்.

அப்போது திருச்சியில் பலத்த மழையின் காரணமாக விமான புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதால் திருச்சியில் உள்ள மாநகர மாவட்ட துணைச்செயலாளர் புல்லட் லாரன்ஸ் அவரது நண்பர் தோழர்கள் ராஜா என்பவருடைய வீட்டில் ஓய்வெடுக்க சென்றார்.

அவர் வீட்டின் அருகில் உள்ள பேட்மிட்டன் மைதானத்தை கண்ட அவர் உற்சாகத்தில் திடீரென பேட்மிட்டன் விளையாட களத்தில் குதித்து உற்சாகத் துள்ளலோடு ஆட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் பெரம்பலூர் நிர்வாகி கிட்டு, திருச்சி மாநகர மாவட்ட துணைச் செயலாளர் புல்லட் லாரன்ஸ், நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் கட்சியினருடன் உற்சாகமாக விளையாட்டில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!